ADDED : மே 27, 2010 03:12 AM
ஈரோடு: "ஈரோடு மாவட்டம் வரும் கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடம் பெற ஆசிரியர், மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,' என எஸ்.எஸ்.எல்.ஸி.,பொது மற்றும் மெட்ரிக் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் கேடயம் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது: ஈரோடு மாவட்ட பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மாநில அளவில் தலை சிறந்த இடத்தை தொடர்ந்து பெறுவது மாவட்ட நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ப்ளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் பிடித்துள்ளது. இவ்விடத்தை பிடிக்க மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்பட்டனர்.மற்ற மாவட்டத்துக்கும், நம் மாவட்டத்துக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதல் இடத்தை பிடிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.